மனித இனத்திற்கு முற்பிறவி, மறுபிறவி உண்டா?? ஜோதிட விளக்கம்!!

0
மறுபிறவி
மறுபிறவி

ஜோதிட சாஸ்திரத்தின் படி நாம் முற்பிறவி மற்றும் மறுபிறவியையும் கணிக்க முடியும். ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் இருக்கும் ராசி நாதர்களின் அடிப்படையில் பிறவி உண்மைகளை கணக்கிடலாம்.

ஜோதிடம்:

மனிதர்களுக்கு 7 ஜென்மம் என்பது உண்டு. அதனை நமது ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் உள்ள லக்கினத்தின் அடிப்படையில் கணக்கிடலாம். மேலும் முன்பிறவி, மறுபிறவி மற்றும் இப்பிறவி போன்றவற்றையும் நமது ஜாதக அடிப்படையில் கணக்கிடலாம். ஆத்மாக்களுக்கு மனித உடல் ஒரு புதையலை போன்றது. ஆன்மாக்களுக்கு எப்பொழுதுமே அழிவு கிடையாது. ஒரு ஆன்மாவிற்கு மனித உடல் கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் அது பல உயிரினங்களாக பிறந்திருக்கும். பகவத் கீதையில் கிருஷ்ணர் உபதேசத்தின் படி ஒரு ஆத்மா மனித பிறவி எடுக்க 84 லட்சம் உயிர் வகைகளை கடந்து வரும். அதாவது பல்லி, பூரான், கரப்பான் பூச்சி போன்ற பிறவிகளை எடுத்திருக்கும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நமது ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் கேது இருந்தால் நமக்கு அடுத்த பிறவி கிடையாது. ஒருவர் 8 மணி அளவில் பிறந்திருந்தால் அவருக்கு மறுபிறவி கிடையாது. மேலும் கேது மோட்சககாரர் என்று அழைப்பதுண்டு. அதனால் 12இல் கேது இருந்தால் அவருக்கு மறுபிறவி கிடையாது.

birth
birth

மேலும் ஒரு ஆன்மா அனைத்து பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்கிறது எனில் அவைகளுக்கு 7 பிறவிகளிலும் மனித பிறவியே கிட்டும். ஒருவரின் முற்பிறவியை அடைய வேண்டுமெனில் அவர்களின் பிறந்த தேதியில் 10 மாதங்கள் முன்னோக்கி சென்று கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை ஜோதிடத்தில் கணக்கிடுவர். எனவே தான் நாம் மனித பிறவி எடுக்கும்போது செய்யும் பாவ புண்ணியத்தின் அடிப்படையில் தான் மோட்சம் கிடைக்குமா?? அல்லது மறுபிறவி கிடைக்குமா?? என்பதை கணிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here