பிளாஸ்மா தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை – அசாம் அதிரடி அறிவிப்பு..!

0

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணியில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Himanta-Biswa-Sarma
Himanta-Biswa-Sarma

ஆடி தள்ளுபடி வந்தாச்சு – சென்னை தியாகராயநகரில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது..!

இந்நிலையில் அசாம் மாநில அரசு பிளாஸ் தானம் அளிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அசாம் அமைச்சர் ஹிமந்தா பீஷ்மா சர்மா கூறுகையில், கொரோனாவிலிரு்ந்து மீண்ட ஒருவர் 400 கிராம் பிளாஸ்மா தானமாக அளிக்க முடியும். இதை வைத்து இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிளாஸ்மா சிகிச்சை மட்டும்தான் பக்க விளைவு இல்லாது பிளாஸ்மா தானம் அளித்தவர் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால் இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here