கோலாகலமாக தொடங்க உள்ள கபடி திருவிழா…, ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தேதி அறிவிப்பு!!

0
கோலாகலமாக தொடங்க உள்ள கபடி திருவிழா..., ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தேதி அறிவிப்பு!!
கோலாகலமாக தொடங்க உள்ள கபடி திருவிழா..., ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தேதி அறிவிப்பு!!

ஆசிய அளவில், கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், கபடி தொடரும் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதுவரை, 8 சீசன்களை மட்டுமே கடந்துள்ள இந்த தொடரில், 7 முறை இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை மாபெரும் வரலாற்றை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், கடைசியாக 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஈரானில் நடைபெற்ற தொடரில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இதே போல தான், மகளிர் கபடி அணியும் இதுவரை 5 சீசன்கள் மட்டுமே நடந்துள்ள ஆசிய சாம்பியன்ஷிப், 4 முறை பட்டத்தை வென்று நடப்பு சாம்பியனாக அசத்தி வருகிறது. ஆனால், இந்த இரு தொடர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவே இல்லை.

பிளே ஆப்புகாக போட்டி போடும் 10 அணிகள்…, யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு வெளியான வைரல் ப்ரோமோ!!

இந்நிலையில், கிட்டதட்ட 6 வருடங்களுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஷிப் கபடி தொடர் நடத்துவது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, வரும் ஜூன் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தென் கொரியாவில் உள்ள பூசன் நகரில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here