ஆசிய சாம்பியன்ஷிப்பில் அசத்தும் இந்தியா…, தோல்வியே சந்திக்காமல் வெற்றி வாகை சூடல்!!

0
ஆசிய சாம்பியன்ஷிப்பில் அசத்தும் இந்தியா..., தோல்வியே சந்திக்காமல் வெற்றி வாகை சூடல்!!
ஆசிய சாம்பியன்ஷிப்பில் அசத்தும் இந்தியா..., தோல்வியே சந்திக்காமல் வெற்றி வாகை சூடல்!!

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில், இந்திய அணி மலேசிய அணியை எதிர்த்து தனது 3 வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டி தொடங்கிய 15 வது நிமிடத்திலேயே இந்தியாவின் கார்த்தி கோல் அடித்து அசத்தினார். இவரை தொடர்ந்து, இந்தியாவின் ஹர்திக் 32 வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 42 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியிலும், இந்திய அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. அதாவது, 53 மற்றும் 54 வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் மற்றும் ஜுக்ராஜ் சிங் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தினார். இறுதி வரை மலேசிய அணி கோல் அடிக்க முயற்சி மட்டுமே செய்தது. இதனால், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் லீக் சுற்றுக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

IND vs WI: தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா…, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here