ஜப்பானுக்கு எதிராக போராடி டிராவில் முடித்த இந்தியா…, ஆசிய சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு!!

0
ஜப்பானுக்கு எதிராக போராடி டிராவில் முடித்த இந்தியா..., ஆசிய சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு!!
ஜப்பானுக்கு எதிராக போராடி டிராவில் முடித்த இந்தியா..., ஆசிய சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு!!

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 2 வது லீக் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டி தொடங்கிய 28 வது நிமிடத்திலேயே ஜப்பானின் கென் நாகயாஷி கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழி செய்தார். இதனை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் சிங் 43 வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியானது 1-1 என டிராவில் முடிந்தது.

 

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், இரு அணிகளும் ஒரு கோல் கூட போடாத நிலையில் ஆட்டமானது டிராவிலேயே முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 2 போட்டிகளில் 1ல் வெற்றி 1ல் டிரா என 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா அணி முதலிடத்தில் உள்ளது.

IND vs IRE 2023: இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணி அறிவிப்பு…, வீரர்களுக்கான முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here