ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஸ்பர்ஷ் குமார், லக்ஷ்ய சாஹர் அசத்தல்.., வெற்றியுடன் துவங்கிய இந்தியா!!

0
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஸ்பர்ஷ் குமார், லக்ஷ்ய சாஹர் அசத்தல்.., வெற்றியுடன் துவங்கிய இந்தியா!!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஸ்பர்ஷ் குமார், லக்ஷ்ய சாஹர் அசத்தல்.., வெற்றியுடன் துவங்கிய இந்தியா!!

இந்திய வீரர்கள் தனது முதல் போட்டியிலேயே 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப்பில் முன்னேறியுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:

ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நேற்று முதல் ஜோர்டானின் அம்மானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 27 நாடுகளிலிருந்து 267 குத்துச் சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், இந்தியா சார்பாக, கோவிந்த் சஹானி, ஸ்பர்ஷ் குமார், லக்ஷ்ய சாஹர், சச்சின், மோனிகா, சவிதா, லோவ்லினா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடரில், முதலில் ரவுண்ட் ஆஃப் 32 ல் இந்தியாவின் ஸ்பர்ஷ் குமார் 51 கிலோ எடை பிரிவில் கிர்கிஸ்தானின் டியுஷெபேவ் நூர்ஜிகிட்டை எதிர்த்து போட்டியிட்டார். இதில், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்பர்ஷ் குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

எலான் மஸ்கின் அடுத்த திட்டம்.,அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! ஷாக்கான ஊழியர்கள்!!

இவரை தொடர்ந்து, 80 கிலோ பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16ல் தஜிகிஸ்தானின் ஷபோஸ் நெக்மட்டை எதிர்த்து இந்தியாவின் லக்ஷ்ய சாஹர் போட்டியிட்டார். இந்த போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்ய சாஹர் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வெற்றியுடன் துவங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here