ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: பதக்கங்களை சுட்டு குவிக்கும் இந்திய வீரர்கள்!!

0
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: பதக்கங்களை சுட்டு குவிக்கும் இந்திய வீரர்கள்!!
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: பதக்கங்களை சுட்டு குவிக்கும் இந்திய வீரர்கள்!!

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்:

ஆசிய கண்டத்தை மையமாக கொண்டு, கிரிக்கெட், டென்னிஸ், பேட்மின்டன், குத்துசண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரின் 15 வது சீசன் தென் கொரியாவில் உள்ள டேகுவில் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரில், இந்தியா சார்பாக 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் மனு பாகே, மெஹுலி கோஷ், யஷஸ்வி ஜோஷி மற்றும் யூத் பிரிவில் யுக்தி ராஜேந்திர, பானோட் கௌதமி கலந்து கொண்டனர். ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில், திவ்யான்ஷ் சிங், ரவிசங்கர் மற்றும் யூத் பிரிவில் மனே பர்த் ராகேஷ், அர்ஜுன் பாபுதா உள்ளிட்டோரும் பங்குபெற்றனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்தியா…, ராகுல் டிராவிட் இடத்தை பிடித்த மாற்று பயிற்சியாளர்!!

இதில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் யூத் பிரிவில், யுக்தி ராஜேந்திர, பானோட் கௌதமி மற்றும் ஹேசல் முதல் மூன்று இடங்களை பிடித்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை போல, ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில், திவ்யான்ஷ் சிங் தங்கமும், ரவிசங்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். யூத் பிரிவில் மனே பர்த் ராகேஷ் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here