ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: பதக்கம் வெல்ல காத்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இதோ!!

0
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: பதக்கம் வெல்ல காத்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இதோ!!
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: பதக்கம் வெல்ல காத்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இதோ!!

ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பங்கு பெற உள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இப்பதிவில் காணலாம்.

ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்:

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து, ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் 2023 பேட்மிண்டன் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர், வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடரில், 17 நாடுகள் குரூப் A, B, C மற்றும் D என்ற 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியா குரூப் Bயில் மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கஜகஸ்தான் நாடுகளுடன் இடம் பெற்றுள்ளது. முதலில் ஒவ்வொரு குரூப்களில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையே, லீக் சுற்றுகள் நடத்தப்பட உள்ளன. இதன் முடிவில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

விரைவில் அணிக்கு திரும்ப இருக்கும் பும்ரா?? தேசிய அகாடமியில் தீவிர பயிற்சி!!

இந்த தொடரில், இந்தியா சார்பாக, பி வி சிந்து, எச்.எஸ்.பிரணாய், லக்ஷ்யா சென் உள்ளிட்டோர் ஒற்றையர் பிரிவிலும், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, ட்ரீஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் இரட்டையர் பிரிவில் பங்கு பெற உள்ளனர். ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் இந்தியன் ஓபன் இரண்டிலும் பதக்கம் வெல்ல தவறிய இந்திய வீரர்கள், ஆசிய தொடரில் பதக்கத்துடன் நாடு திரும்புவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here