வம்புக்கு அலையும் ரஷீத் கான்! களத்தில் முட்டும் சண்டை காட்சி.., விளையாட்டே விபரீதமாய்ப்போச்சே!

0

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை – ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் அரங்கேறிய வாக்குவத்திற்கான வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இலங்கை – ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த சூப்பர் 4 சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி 20 ஓவரில் 175 ரன்கள் குவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இந்நிலையில் இலங்கை அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 19.1 ஓவரில் இலக்கை அடைந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி இடம் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வேண்டுமென்றே எதிர் அணியை வம்பிழுத்து உள்ளார்.

அதாவது போட்டியின் போது குண திலகாவும் ராஜபக்சாவும் சிறப்பாக பேட்டிங் ஆடி இலங்கையை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அப்போது பௌலிங் செய்த ரஷீத் கான் வேண்டுமென்றே குணதிலகா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதாவது 17 வது ஓவரை ரஷீத் கான் வீச, அந்த ஓவரின் முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார். ஏற்கனவே விக்கெட் தேடலில் இருந்த ரஷீத் கான், குணதிலகா வின் பவுண்டரியால் கடுப்பாகி அவருடன் சண்டை போட்டார். இதனால் கடுப்பான குண திலகாவும் பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்தார். இந்த சண்டை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here