IND VS PAK : பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர்.., இந்தியா வெற்றி பெறுவது உறுதி!

0
IND VS PAK : பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர்.., இந்தியா வெற்றி பெறுவது உறுதி!
IND VS PAK : பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர்.., இந்தியா வெற்றி பெறுவது உறுதி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோத உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியை செய்த ஷாநவாஸ் தஹானி வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்!

ஆசியக் கோப்பை தொடருக்கான சூப்பர் 4 ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையில் இதற்கு முன்னர் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால், சூப்பர் 4 ஆட்டத்தில் பதிலடி கொடுப்பார்கள் என அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது தற்போது உறுதியாகிவிட்டது. அதாவது ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணிகளும் சரி, பாகிஸ்தான் அணியிலும் சரி நட்சத்திர வீரர்கள் சிலர் காயம் காரணமாக வெளியேறிக்கொண்டே வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு தரும் விதமாக இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வ தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இவர் தான் இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

தற்போது இவர் இல்லாததால் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன் சொதப்பி வந்த நிலையில் முக்கிய பந்துவீச்சாளரான இவரும் வெளியேறியது அந்த அணிக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தினாலும் எதிரணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலைகளை சமாளித்து இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here