Asia Cup 2022: ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை – வெற்றி வாகை யாருக்கு?

0
Asia Cup 2022: ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை - வெற்றி வாகை யாருக்கு?

ஆசிய கோப்பை தொடருக்கான மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் இன்று மோத உள்ளனர்.

ஆசிய கோப்பை தொடர்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆறு அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இவை இரு அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் முதல் நாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வங்கதேச அணியை இன்று சந்திக்கிறது. இதற்கு முன்னர் ஆசிய கோப்பை வரலாற்றில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை சென்று வங்கதேச அணி தோல்வி அடைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இறுதிப் போட்டியை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் அடுத்த போட்டியை சந்திக்க உள்ளனர். இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்:

ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமான், பாசல்ஹக் பரூக்கி.

வங்காளதேசம்:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சபிர் ரகுமான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here