இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் ஆறு அணிகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதன் லீக் சுற்றுகள் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினர். செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த சூப்பர் 4 சுற்றில், அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன்படி, 2 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2ல் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை பெற்று 2வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளனர். இதில், பங்களாதேஷ் அணியானது 2 போட்டியிலும் தோல்வி அடைந்து 4வது இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியை இந்த 4 அணிகளும் விளையாடிய பிறகு புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்துள்ள அணிகளே ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டியை செப்டம்பர் 17 ஆம் தேதி விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs SL: பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா…, பவுலிங்கில் சூறாவளியாக மாறி இலங்கையை வீழ்த்தி அசத்தல்!!