
ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 4 சுற்றில், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் நேற்று பாகிஸ்தான் அணியை எதிர்த்து இலங்கை அணி மோதியது. மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கிய இந்த போட்டி 42 ஓவர்களை கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்களை குவித்திருந்தது. இந்த இலங்கை துரத்திய இலங்கை அணி 42 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், தொடர்ந்து 2வது முறையாக இலங்கை அணி ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இறுதிப் போட்டியில் மோத உள்ளது.