ஆசிய கோப்பை 2023: வெளியான புள்ளிப் பட்டியல்…, சூப்பர் 4 சுற்றில் யாருக்கெல்லாம் வாய்ப்பு??

0
ஆசிய கோப்பை 2023: வெளியான புள்ளிப் பட்டியல்..., சூப்பர் 4 சுற்றில் யாருக்கெல்லாம் வாய்ப்பு??
ஆசிய கோப்பை 2023: வெளியான புள்ளிப் பட்டியல்..., சூப்பர் 4 சுற்றில் யாருக்கெல்லாம் வாய்ப்பு??

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது ஒருநாள் வடிவில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரானது, இரு குரூப்களின் கீழ் தலா 3 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், குரூப் A யில் இடம்பெற்றுள்ள அணிகளில் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்திய அணி ஒரு புள்ளியுடன் 2வது இடத்தையும், புள்ளிகள் ஏதுமின்றி நேபாள அணி கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இன்று நடைபெறும் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றால் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். இதை போல, குரூப் Bயில் தனது லீக் சுற்றை முடித்த பங்களாதேஷ் அணி 1ல் வெற்றி 1ல் தோல்வி என 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதில், ஒரு போட்டியில் விளையாடி உள்ள இலங்கை அணி ஒரு வெற்றியுடன் (2 புள்ளி) முதலிடத்தையும், ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தையும் பிடித்துள்ளன. நாளை, இலங்கை எதிர்த்து ஆப்கானிஸ்தான் விளையாடும் போட்டி மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை என தெளிவாக தெரிய வரும்.

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து திடீரென விலகிய பும்ரா…, காரணம் இதுவா?? வெளியான தகவல் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here