ஜெய் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!! ஆசிய கோப்பை குறித்த அப்டேட் வெளியிடு!!

0
ஜெய் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!! ஆசிய கோப்பை குறித்த அப்டேட் வெளியிடு!!
ஜெய் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!! ஆசிய கோப்பை குறித்த அப்டேட் வெளியிடு!!

2023 ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த தொடருக்காக, இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐயின் செயலாளருமான ஜெய் ஷா கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா, ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது என்று பதிலடி கொடுத்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், ஆசிய கோப்பை நடைபெறுவது குறித்த தெளிவான முடிவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான், ஜெய் ஷா தனது டிவீட்டர் பக்கத்தில், நேற்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ஷெடுயலை தயார் செய்து வெளியிட்டார். இந்த ஷெடுயலில், இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில் இடம் பெற்று இருப்பதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம், இந்தியா, ஆசிய கோப்பையில் பங்கு பெறும் என்பது தெளிவாக உள்ளது.

விராட் கோலி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அக்சர் படேல்…, T20 யின் சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!

ஆனால், பாகிஸ்தானில் நடைபெறுமா என்பது கேள்வி குறியாகி உள்ளது. இதனை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி, ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பையில் இணைந்ததற்கு நன்றி என்று ஜெய் ஷாவின் ட்வீட்டை டேக் செய்து கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் உள்ளூர் லீக்கான PSL அதற்கு கூறிய அட்டவணையையும் தயார் செய்து தருமாறு கேலி செய்துள்ளார். இவரது இந்த ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் என்ற கருத்துக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here