ஆசிய கோப்பை 2023: இந்தியா, பாகிஸ்தானுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் புதிய அணி!!

0
ஆசிய கோப்பை 2023: இந்தியா, பாகிஸ்தானுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் புதிய அணி!!
ஆசிய கோப்பை 2023: இந்தியா, பாகிஸ்தானுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் புதிய அணி!!

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கு முதன் முதலாக, இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் தகுதிப் பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை:

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய கோப்பை தொடரானது, சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) சார்பாக, நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு வருடம், இந்த ஆசிய கோப்பை தொடர், ஒருநாள் வடிவில் பாகிஸ்தானில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ள போட்டிகள் மட்டும், மாற்று இடத்தில் நடத்த பிசிசிஐ வலியுறுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு, சர்வதேச அணிகளான இலங்கை உட்பட சில அணிகள் ஆதரவு தெரிவிக்காததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆலோசனை நடத்தி வருகிறது. பிசிசிஐ-யின் கோரிக்கையை பிசிபி மறுக்கும் பட்சத்தில், ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடுவது பெறும் கேள்வி குறியாகும். இதற்கிடையில், பிசிசிஐயின் செயலாளரும், ஏசிசி-ன் தலைவருமான ஜெய் ஷா, ஒருவேளை ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டால், முதலில் பிசிபிக்கு தான் தெரிவிக்கப்படும் என சமீபத்தில் கூறியுள்ளார்.

மைதானத்தில் எல்லை மீறிய விராட் கோலி, கவுதம் கம்பீரின் சண்டை…, மொத்தையும் இழந்த அதிர்ச்சி சம்பவம்!!

இது போன்ற குழப்பங்கள் ஒருபுறம் நடந்தாலும், ஆசிய கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மறுபுறம் நடைபெற்று தான் வருகின்றன. இந்த வகையில், மலேசியா, ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி, முதன் முதலாக நேபாள அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, ஆசிய கோப்பைக்கான ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here