
ஆசிய கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால், இந்த போட்டியில் தனித்துவ சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதில், விக்கெட் கீப்பரான கே எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து சதீராவின் விக்கெட்டை எடுத்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது குறித்து குல்தீப் யாதவ், “KL ராகுல் என்னை 4வது அல்லது 5வது ஸ்டம்பில் ஒரு பௌல் செய்ய அறிவுறுத்தினார். இதன்படியே சதீராவின் விக்கெட்டும் எளிதாக கிடைத்தது. இதற்கு KL க்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார். கேஎல் ராகுல் இதற்கு, “நான் ஒரு ஹிண்ட் மட்டுமே கொடுத்தேன். இதை கச்சிதமாக பயன்படுத்தி குல்தீப் யாதவ் சதீராவின் விக்கெட்டை எடுத்தார். இதில் எனக்கு எந்த கிரெடிட்டும் இல்லை” என பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.