ஆசிய கோப்பையை வெல்ல போவது யார்??  : இறுதிப் போட்டியில் இந்தியா vs இலங்கை பலப்பரீட்சை!!

0
ஆசிய கோப்பையை வெல்ல போவது யார்??  : இறுதிப் போட்டியில் இந்தியா vs இலங்கை பலப்பரீட்சை!!
ஆசிய கோப்பையை வெல்ல போவது யார்??  : இறுதிப் போட்டியில் இந்தியா vs இலங்கை பலப்பரீட்சை!!
ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்குபெற்ற இந்த தொடரில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளனர். இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டியில் 8 முறை மோதியுள்ளன. இதில், 5 முறை இந்திய அணியும் 3 முறை இலங்கை அணியும் கோப்பையை தட்டிச் சென்றுள்ளனர்.

மேலும், இதுவரை நடந்த ஆசிய கோப்பையை 7 முறை இந்திய அணியும், 6 முறை இலங்கை அணியும் வென்று அசத்தியுள்ளனர். இதையடுத்து, நடப்பு சீசனுக்கான ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும் என்று துல்லியமாக கணிக்க முடியாது. இதனால், ஆசிய கோப்பையை வெல்ல இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்திய அணியில் எதிர்ப்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா

இலங்கை அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (சி), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, மதீஷ பத்திரன, பிரமோத் மதுஷன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here