ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் முடிக்கும்மா இந்தியா?? பங்களாதேஷிற்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் முடிக்கும்மா இந்தியா?? பங்களாதேஷிற்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் முடிக்கும்மா இந்தியா?? பங்களாதேஷிற்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றுகள் இன்றுடன் முடிவடைய உள்ளன. இன்று நடைபெற உள்ள இந்த போட்டியில், பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி மோத உள்ளது. ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 4 சுற்றின் முதல் 2 போட்டியை வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றி தோல்வி ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும், நடப்பு ஆசிய கோப்பையில் ஒரு தோல்வியும் சந்திக்காத அணி என்ற பெயரை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் காணவும் இந்திய அணிக்கு வெற்றி என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால், தரமான பிளேயிங் லெவனையே இந்திய அணி தேர்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூன்று வடிவிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா…, ஐசிசி தரவரிசையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

இந்திய அணியில் எதிர்ப்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

பங்களாதேஷ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ஷேக், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ் , ஷாகிப் அல் ஹசன் (சி) , முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, நசும் அகமது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here