ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி போட்டியிட்டு வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொத்தாலும், ஷகிப் அல் ஹசன் (80) மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் (54) அதிரடியாக விளையாடி 200 ரன்களுக்கு மேல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த போட்டியில் இந்தியாவின் ஜடேஜா, ஷமிம் ஹொசைன் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்தி அசத்தி உள்ளார். மேலும், ஆல்ரவுண்டராக ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது இந்தியர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். இவர், 182 ஒருநாள் போட்டிகளில் 2578 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், கபில் தேவ் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் தருணத்தை கூட அனுபவித்த விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!