இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசனுக்கான சூப்பர் 4 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றில், அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி முடிந்துள்ள நிலையில், இந்தியா அணி முதலிடத்திலும், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் அடுத்த 3 இடங்களிலும் உள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில், இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்துள்ளது. இதையடுத்து, தலா 2 புள்ளிக்களுடன் 2வது மற்றும் 3 வது இடத்தில் உள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற இன்று மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி காட்டாயம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.