சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடரில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்தானதையடுத்து இன்று தனது 2வது போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது. இந்த போட்டியில் இருந்து மட்டும், இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பேசிலிஸ்ட்டான பும்ரா திடீரென விலகி உள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தனது முதல் குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக பும்ரா மும்பை செல்வதால் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இன்றைய போட்டியில் பும்ராவின் இடத்தை சீனியர் வீரரான முகமது ஷமி நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா மீண்டும் ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் களமிறங்குவார் தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா…, நேபாளம் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!