பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் போடும் இந்தியா – 3 பேரால் கிடைக்க போகும் வெற்றி…, குஷியில் ரசிகர்கள்!

0
பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் போடும் இந்தியா - 3 பேரால் கிடைக்க போகும் வெற்றி..., குஷியில் ரசிகர்கள்!
பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் போடும் இந்தியா - 3 பேரால் கிடைக்க போகும் வெற்றி..., குஷியில் ரசிகர்கள்!

ஆசிய கோப்பை தொடர் சூப்பர் 4 சுற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்று பந்துவீச்சாளர்களை வைத்து வெற்றி பெற மிகப்பெரிய திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி செய்யப்போவது என்ன!

ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மீண்டும் இன்று நடைபெற உள்ளது. இதில் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்க வேண்டும் என அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். அதன் படி முதல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் அனைவரும் எப்படி விளையாடுகிறார்கள் என அனைத்தையுமே தெரிந்து வைத்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆனால் இங்க தான் ரோகித் சர்மா மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். அதாவது பேட்டிங் வரிசை பொருத்தவரையில் ரோகித், ராகுல், விராட் கோலி சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறந்த பார்மில் உள்ளனர். இதனால் அதிக ரன்கள் குவிக்க கூடிய வகையில் இந்திய அணி உள்ளது. அதேபோன்று பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் முதல் போட்டியில் ஆவேஷ் கான் ஆகியோர் களமிறங்கி விளையாடினார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது ஆட்டத்தில் அஸ்வின், யுகேந்திர சாஹல், தீபக் ஹூடா ஆகியோரை களமிறக்க ரோஹித் முடிவு எடுத்துள்ளார்.

இந்த மூன்று பேரின் பந்துவீச்சை அறிந்து கொள்வதற்கே பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவர்கள் மூவரும் பாகிஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தி விடுவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதில் ஆஃப் பிரேக் ஸ்பின்னர் தீபக் ஹூடா வால் பவர் பிளே-வில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுக்க கூடிய திறமை படைத்தவர். இதனால் அவர்கள் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்துவார்கள். மேலும் துபாய் சர்வதேச மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் உதவும் என்பதால் இந்திய பந்துவீச்சாளர்கள் பல சாதனைகள் புரிய வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here