பன்றதையும் பன்னிட்டு என்ன விளக்கம் – ஆட்டத்தில் சொதப்பிய இந்திய அணி…, ரோஹித் தந்த காரணம்!

0
பன்றதையும் பன்னிட்டு என்ன விளக்கம் - ஆட்டத்தில் சொதப்பிய இந்திய அணி..., ரோஹித் தந்த காரணம்!
பன்றதையும் பன்னிட்டு என்ன விளக்கம் - ஆட்டத்தில் சொதப்பிய இந்திய அணி..., ரோஹித் தந்த காரணம்!

தகுதி சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்ததற்கு ரசிகர்கள் அனைவரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ரோகித் தந்த விளக்கம்!

ஆசிய கோப்பை தொடருக்கான ஆட்டம் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த நிலையில் நேற்று தகுதி சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என நினைத்த நேரத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் அனைவரும் மோசமாக சொதப்பியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டி மிகுந்த அழுத்தமானது மற்றும் ரசிகர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்த போட்டியாக இருந்தது. இதனால் இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடினோம்.

ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் ரிஸ்வான் மற்றும் நவாஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக ரன்கள் குவித்தனர். அவர்களின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனாலும் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சற்று கவனத்துடன் பௌலிங் செய்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்போம். மேலும் கடைசி நேரத்தில் எங்கள் அணியின் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்போம் என கூறியுள்ளார். மேலும் இனி வரும் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here