இந்தியாவின் கோல் மழையில் நனைந்த சென்னை…, சீனாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடக்கம்!!

0
இந்தியாவின் கோல் மழையில் நனைந்த சென்னை..., சீனாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடக்கம்!!
இந்தியாவின் கோல் மழையில் நனைந்த சென்னை..., சீனாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடக்கம்!!

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் 7 வது சீசன் நேற்று முதல் சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இதில், இந்திய அணி சீன அணியை எதிர்த்து தனது முதல் போட்டியை விளையாடியது. இந்த போட்டியில், இந்திய அணி ஆரம்ப முதலே முழு ஆதிக்கத்தையும் செலுத்த தொடங்கியது. அதாவது, போட்டி தொடங்கிய 5 மற்றும் 8 வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்கள் அடிக்க, 15 மற்றும் 16 வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் தொடர்ந்து கோல் அடித்து அசத்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் தொடர்ச்சியாக, சீனாவின் இ வென்ஹுய் மற்றும் காவ் ஜி ஷெங் 18 வது மற்றும் 25வது நிமிடத்தில் கோல்கள் அடித்தனர். இதற்கிடையில், மீண்டும் இந்திய அணியின் கோல் வேட்டை தொடங்கியது. அதாவது, 19 மற்றும் 30 வது நிமிடத்தில் வருணும், 40 வது நிமிடத்தில் மந்தீப்பும் கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7-2 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND vs WI: முதல் T20யில் வெற்றியை தவற விட்ட இந்தியா…, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here