ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்.., காயத்தால் வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பிய இந்திய வீரர்!!

0
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்.., காயத்தால் வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பிய இந்திய வீரர்!!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்.., காயத்தால் வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பிய இந்திய வீரர்!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிவ தபா, காயம் காரணமாக தங்கப் பதக்கத்தை தவிட்டுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:

கடந்த 1ம் தேதி முதல், ஜோர்டானின் அம்மனில் நடைபெற்று வந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில், இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வேட்டையாடி வந்தனர். இதில், பல்வேறு எடை பிரிவுகளின் கீழ் நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் லவ்லினா, ஆல்பியா பதான், பர்வின் ஹூடா மற்றும் சவீட்டி வெற்றி பெற்று இந்தியா சார்பாக 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், இந்திய பெண்கள் பிரிவு 4 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 7 பதக்கங்களை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து, இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிவ தபா, உஸ்பெகிஸ்தான் ருஸ்லான் அப்துல்லாவை எதிர் கொண்டார்.

இந்த போட்டியில், இந்தியாவின் சிவ தபா காயம் அடைந்திருந்தார். இதன் விளைவால், நடுவர் போட்டியை நிறுத்தி உஸ்பெகிஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த வெற்றி அறிவித்த போது, சிவ தபா காயத்தின் காரணமாக அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தியாவின் சிவ தபா வெள்ளி பதக்கத்தை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here