ரவுடி பேபி பாடலை தொடர்ந்து டாப் கியரில் செல்லும் முணுமுணுக்குற முத்தம்மா பாடல்… குதூகல கொண்டாட்டத்தில் அஷ்வின் ரசிகர்கள்!!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின். சமீபத்தில் அவருடைய குட்டி பட்டாசு என்ற சாங் ஆல்பம் வெளியானது. இந்த பாடல் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளது. அதாவது அவரின் அந்த பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிக பெரிய சாதனையை படைத்து உள்ளது. இதனால் மிகுந்த குஷியில் அஷ்வின் ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் அஷ்வின். அதற்கு முன்பு அவர் ஒரு சில படங்களில் ஒரு சில வேடங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அவரை மக்களுக்கு  நன்கு அறிய வைத்தது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் அஷ்வின், ஷிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்டோர் செய்யும் பல சேட்டைகள்  மற்றும் செயல்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கான ஒன்று. இதையடுத்து தற்போது அவருக்கு பட வாய்ப்புகள்  வர தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வின் அவர்களின் குட்டி பட்டாசு என்ற இசை ஆல்பம் வெளியானது. வெளியான போதே அதன் முணுமுணுக்குற முத்தம்மா என்ற பாடல் வரிகளும், அஸ்வின் மற்றும் நடன குழுவின் நடன பாவனைகளும் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த பாடல் மற்றொரு சாதனையை படைத்தது உள்ளது. அதாவது, யூடியூப்பில் இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி மிக பெரிய சாதனையை படைத்து உள்ளது. இதையடுத்து அஷ்வின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here