தமிழ்நாடு அணி மீது விழுந்த விமர்சனம்…, பதிலடி கொடுத்த இந்திய வீரர்!!

0
தமிழ்நாடு அணி மீது விழுந்த விமர்சனம்..., பதிலடி கொடுத்த இந்திய வீரர்!!
தமிழ்நாடு அணி மீது விழுந்த விமர்சனம்..., பதிலடி கொடுத்த இந்திய வீரர்!!

விஜய் ஹசாரே டிராபியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு அணியை ஒருவர் விமர்சிக்க பதிலடி கொடுத்து, இந்தியா வீரர் அஸ்வின் மற்றும் அபினவ் முகுந்த் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அணி:

இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வருகின்றன. இந்த டிராபியில் தமிழ்நாடு அணி, இதுவரை விளையாடிய 7 போட்டிகளில், முதல் மற்றும் இறுதி போட்டி மழை காரணமாக முடிவில்லாமல் போக, மற்ற 5 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், தமிழ்நாடு அணி விளையாடிய 5 போட்டிகளிலும், நாராயண் ஜெகதீசன் தொடர்ந்து சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும் அடித்து சாதனை படைத்திருந்தார். மேலும், பவுலிங்கிலும் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டு, அருணாச்சல பிரதேச அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாதனையும் படைத்திருந்தது. இதனால், பலதரப்பில் இருந்தும், தமிழ்நாடு அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

என் இலக்கை அடைந்து விட்டேன்…, ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்நிலையில், மும்பை சேர்ந்த ஒருவர், 88 வருடமாக விளையாடப்படும் ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு அணி 2 முறை மட்டும் தான் வென்றுள்ளது என டிவிட்டரில் கேலி செய்துள்ளார். இதற்கு, தமிழகத்தின் முன்னாள் வீரர், அபினவ் முகுந்த், 20 வருடத்தில் விஜய் ஹசாரே டிராபியை தமிழ்நாடு அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது தெரியவில்லையா? என பதிலடி கொடுத்துள்ளார். இந்திய வீரர் அஸ்வினும், தமிழ்நாடு அணியை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள் என்று பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here