அறிவுகெட்டவன்.. என்ன இப்படி திட்றாரு.. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனரை கண்டபடி பேசிய அஸ்வின்!

0
அறிவுகெட்டவன்.. என்ன இப்படி திட்றாரு.. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனரை கண்டபடி பேசிய அஸ்வின்!

ஒரு சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு தன் கேரியரை நகர்த்தி வந்தவர் அஸ்வின். இவரின் முயற்சி எதுவும் வேலைக்கு ஆகாததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலம் அடைந்த அஸ்வின் ஆல்பம் பாடல்கள் உள்பட படங்களிலும் நடித்து பிஸியானார். ஆனால் இவர் பட நிகழ்ச்சி ஒன்றில் 40 கதை கேட்டு தூங்கி விட்டேன் என பேசி சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது தான் ரசிகர்கள் அந்த சம்பவத்தை ஓரளவுக்கு மறந்து அஸ்வினை மன்னித்துள்ளனர். தற்போது மீண்டும் இவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அண்மையில் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதில் அஸ்வினை நக்கலடிக்கும் ஒரு சீன் இடம்பெற்று இருக்கும். அந்த காட்சியில் ஒருவர், தன் மகனுக்கு சினிமா சான்ஸ் கேட்பதற்காக தனது மகனின் போட்டோவை காட்டி, “சார் இவன் பேரு அஸ்வின் குமார், அவனே AK-ன்னு சொல்லிகிடுவான். போட்டோல தூங்குன மாதிரிதான் இருப்பான். ஆனா நேர்ல நல்லா இருப்பான்” என்று டையலாக் பேசியிருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது மறைமுகமாக கூட இல்லாமல் நேரடியாக அஸ்வினை தாக்குவதாக பலர் பேசினார்கள். தற்போது அஸ்வின் அதற்கு பதில் அளித்துள்ளார். தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவழகனை ‘Brainless beauty’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அஸ்வின் பதிவிட்டுள்ளார். அதாவது “நீங்கள் Brain beauty கிடையாது, Brainless beauty என்று நிரூபித்திருக்கிறீர்கள். சாரு Reviews பாத்திருப்பாருன்னு நம்புறேன். புரிஞ்சவன் பிஸ்தா” என பதிவிட்டுள்ளார் அஸ்வின். இது தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here