அஷ்வின் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் ‘குட்டி பட்டாஸ்’ – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் நடித்துள்ள ‘குட்டி பட்டாஸ்’ என்ற ஆல்பம் பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலால் அஷ்வின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி அஷ்வின்

சமீபகாலமாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் ஒரு நபர் குக் வித் கோமாளி அஷ்வின் குமார். சினிமாவில் ஆரம்பகால கட்டங்களில் குறும்படங்களில் நடித்து வந்த அஷ்வின் குமாருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கான சரியான வாய்ப்பு எதுவும் அஷ்வினுக்கு கிடைக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் இவர் நடித்த சில தொடர்கள் அஷ்வினின் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஓ காதல் கண்மணி’, ‘ஆதித்ய வர்மா’ உட்பட சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார் அஷ்வின்.

இதுவே இன்னும் முடியல, அதுக்குள்ள மரபணு மாறிய கொரோனவா??சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

அஷ்வின் சினிமா துறைக்கு வந்து 7 வருடங்கள் கடந்துவிட்டது. இது குறித்து சமீபத்தில் அஷ்வின் அளித்த பேட்டியில், சினிமாவில் ஆரம்ப கட்டங்களில் பல எதிர்மறையான விமர்சனங்களை இவர் சந்தித்ததாகவும், பல ஏமாற்றங்களை கடந்து வந்ததாகவும் பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஷ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட்டி பட்டாஸ்’ என்ற ஆல்பம் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அஷ்வின் நடித்துள்ள இந்த பாடலில் இவருடன் இணைந்து பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். இந்த தகவலால் அஷ்வின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here