சர்வதேச அளவில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்…, அதிக விக்கெட்களை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் இதோ!!

0
சர்வதேச அளவில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்..., அதிக விக்கெட்களை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் இதோ!!
சர்வதேச அளவில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்..., அதிக விக்கெட்களை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் இதோ!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் அஸ்வின், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

அஸ்வின்:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று முதல் நடைபெற்று வரும் இந்த போட்டியில், இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ளன. இதில், இந்திய அணியானது 109 ரன்களும், ஆஸ்திரேலிய அணியானது 197 ரன்களும் எடுத்துள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், இந்திய அணியின் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை விழ்த்தியதன் மூலம், கபில் தேவ்வின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, சர்வதேச அளவில் 356 போட்டிகளில் 687 விக்கெட்டுகளை கபில் தேவ் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை தக்க வைத்திருந்தார்.

புதிய ஜெர்சியுடன் ஸ்மிருதி மந்தனா…, RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

தற்போது இந்த சாதனையை, அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 269 போட்டிகளில் 689 விக்கெட்டுகளை கைப்பற்றி கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி உள்ளார். சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள இந்திய வீரர்கள் பட்டியலில், அனில் கும்ப்ளே 953, ஹர்பஜன் சிங் 707, அஸ்வின் 689*, கபில் தேவ் 687 மற்றும் ஜாகீர் கான் 597 விக்கெட்டுகளுடன் டாப் 5 இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here