இது நடக்க வாய்ப்பே இல்ல.., பாகிஸ்தான் குறித்து அஸ்வின் சொன்ன அந்த விஷயம்!!!

0
இது நடக்க வாய்ப்பே இல்ல.., பாகிஸ்தான் குறித்து அஸ்வின் சொன்ன அந்த விஷயம்!!!
இது நடக்க வாய்ப்பே இல்ல.., பாகிஸ்தான் குறித்து அஸ்வின் சொன்ன அந்த விஷயம்!!!

ஆசிய கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரை தொடர்ந்து ஒரு நாள் உலக கோப்பை, ஆசிய கோப்பை என அடுத்தடுத்து ICC சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் இந்திய அணியின் BCCI செயலாளர் ஜெய் ஷா பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் என தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வந்தனர். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் விக்கிபீடியாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு விலக்கு.., பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதாவது நாங்கள் ஆசிய கோப்பையில் விளையாட வில்லை என்றால் ஒரு உலக கோப்பைக்கு இந்தியா வரமாட்டோம் என பல முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டி வருகின்றனர். இதை நாங்கள் பல முறை பார்த்துவிட்டோம். ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு கொஞ்சம் கூட கிடையாது என பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here