“இவரது கேப்டன்சி கீழ் நடக்கும் போட்டி சொர்க்கத்தில் நடப்பது போல இருக்கும்”…, இந்தியாவின் அஸ்வின் புகழாரம்!!

0
"இவரது கேப்டன்சி கீழ் நடக்கும் போட்டி சொர்க்கத்தில் நடப்பது போல இருக்கும்"..., இந்தியாவின் அஸ்வின் புகழாரம்!!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி குறித்து, இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அஸ்வின்:

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அணியை சிறப்பாக செயல்படுத்தியதுடன், அணியை மிகவும் ஆக்டிவ்வாகவே வைத்திருந்தார். இதற்கு ஏற்றார் போலவே ஆஸ்திரேலிய அணியினர் பில்டிங்கில் வேகமாக செயல்பட்டு அசத்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாடு குறித்து இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ஸ்டீவ் ஸ்மித் தலைமையின் கீழ் நடக்கும் போட்டிகள் எப்போதும் புத்திசாலித்தனமானதாகவும், சொர்க்கத்தில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.

இனிதே முடிந்த பசங்க பட கிஷோர்-ப்ரீத்தி திருமணம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!

இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்த வேகப்புயல் மிட்செல் ஸ்டார்க் குறித்து அஸ்வின், ஒருநாள் தொடர் என்று வந்து விட்டால் ஸ்டார்க் ஜாம்பவான் பிறெட் லீயை போல செயல்படுவார் என புகழ்ந்துள்ளார். மேலும், சமீபத்தில் ஷான் டெய்ட், மிட்செல் ஸ்டார்க் ஆல்-டைம் கிரேட் ஆவதற்கு நேரம் நெருக்கிவிட்டது என கூறியிருந்தார். இதற்கு, அஸ்வின், அந்த நிலையை மிட்செல் ஸ்டார்க் எப்போவோ அடைந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here