பள்ளிகளில் 8000 ஆசியர்கள் பணியிடங்களை ரத்து செய்து உத்தரவு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

0
பள்ளிகளில் 8000 ஆசியர்கள் பணியிடங்களை ரத்து செய்து உத்தரவு - மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!
பள்ளிகளில் 8000 ஆசியர்கள் பணியிடங்களை ரத்து செய்து உத்தரவு - மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க கல்வி துறையின் கீழ் காலியாக இருக்கும் 8000 பள்ளி ஆசிரியர் பணியிடங்களை, ரத்து செய்வதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு:

கொரோனா பெருந் தொற்றுக்கு பின்பு, கல்வி நிறுவனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில், சர்வ சிக்ஷா அபியான் என்று சொல்லப்படும் தொடக்க கல்வித்துறையில் காலியாக இருந்த 8000 பள்ளி ஆசிரியர் பணியிடங்களை, ரத்து செய்வதாக மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுகுறித்து பேசிய அவர், அரசின் கீழ் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 11,206 ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது, அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இந்தப் பணியிடங்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், நீண்ட காலமாக இந்த காலிப்பணியிடம் இருப்பதால் இந்த முடிவை மேற்கொள்வதாக அரசு தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்., மறந்தும் இதை செய்யாதீங்க! டெல்லி காவல்துறை எச்சரிக்கை!!

எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் இந்த காலி பணியிடங்களை மீண்டும் கணக்கில் எடுத்து, அதனை நிரப்ப வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here