கிரிக்கெட் உலகில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்.., நடுவர் மாரடைப்பால் திடீர் மரணம்!!

0
கிரிக்கெட் உலகில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கிரிக்கெட் உலகில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

சர்வதேச கிரிக்கெட் தொடரின் முன்னாள் நடுவர் ஆசாத் ரவூப் உடல் நல குறைவு காரணமாக இன்று காலமானார்.

ஆசாத் ரவூப்!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசாத் ரவூப் இதுவரை 231 சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். 66 வயதாகும் ஆசாத் ரவூப் கடந்த 2000 ஆம் ஆண்டு தனது நடுவர் பணியை தொடங்கினார். அன்றிலிருந்து ரவூப் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒரு நாள் போட்டி மற்றும் 28 T20 போட்டிகளில் நடுவராக பணியாற்றினார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஆசாத் ரவூப் இன்று மாரடைப்பால் காலமானார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது தம்பி தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டார். இதை அறிந்த கிரிக்கெட் வட்டாரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவருடன் பணியாற்றிய சக நடுவர் ஆசாத் ரவூப் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இவர் ஒரு சிறந்த நடுவர் களத்தில் பல சாதனைகள் செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் எப்போதும் நகைச்சுவை உணர்வோடு பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here