அட கொடுமையே.. ஆர்யா, விஷாலின் எனிமி படத்தை பார்க்க சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோகம்!!

0

ஆர்யா, விஷாலின் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்க வினோத் என்பவர் தயாரித்து இந்த தீபாவளிக்கு வெளியான படம் எனிமி. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அண்ணாத்த படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த எனிமி படத்தை ஆர்வமாக பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சேலம் மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் படத்தின் இரண்டாம் பாதியை முதலில் திரையிடப்பட்டு இருக்கிறது. படத்தை புரியாமல் பார்த்த ரசிகர்கள் எண்டு கார்டு போட்ட பிறகே நடந்ததை புரிந்து கொண்டு கூச்சலிட தொடங்கியுள்ளனர்.

பின்னர் அந்த தியேட்டருக்குள் போலீசார் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஹாலிவுட் படங்கள் போன்று இருப்பதால் நடிகர், நடிகைகளின் பெயர்கள் படம் முடியும் போது வரும் என்று நினைத்து விட்டோம். பின்னர் தான் அது இரண்டாம் பாதி என்று புரிந்தது என்று புலம்பி தள்ளி வருகின்றனர் ரசிகர்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here