ஆர்யா சாயிஷா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!!

0
நடிகர் நடிகையான ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இந்த தகவல் அறிந்த திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை அந்த தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்யா மற்றும் சாயிஷா கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு முன்பே கஜினி காந்த், காப்பான் போன்ற படங்கள் இணைந்து நடித்து உள்ளனர். கஜினி காந்த் படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் வெளியான படம் டெடி. தியேட்டர்கள் இல்லாததால் OTT யில் இப்படம் வெளியானது. ஆனால் பலர் நினைத்ததை விட இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் தன் ட்விட்டர் பக்கத்தின் வழியாக தெரிவித்தார். தற்போது அந்த தம்பதிக்கு அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here