டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றி பெற்றது. எனவே அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் அந்த விழாவிற்கு வெளிமாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என யாருக்கும் அழைப்பு விடுக்காமல் 1 வயது குழந்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடப்பட்டு உள்ளது.
கெஜ்ரிவாலின் ஜெராக்ஸ்..!
அரவிந்த் கெஜ்ரிவால் (மப்ளர் மேன்) ‘மினி வெர்சன்’ என செல்லமாக ஆம் ஆத்மி கட்சியினரால் அழைக்கப்படும் அந்த ஒரு வயது குழந்தை ஸ்வெட்டர், கழுத்தில் மஃப்ளர், கண்ணாடி, தலையில் ஆம் ஆத்மி தொப்பி ஆகியவற்றுடன், பென்சிலால் வரையப்பட்ட மீசையோடு பார்ப்பதற்கு அப்படியே அரவிந்த் கெஜ்ரிவால் போன்று காட்சியளிக்கிறது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றபோது அங்கு தனது பெற்றோருடன் வந்த இந்த குழந்தை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இக்குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |