தனது மனைவியின் இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா – இணையத்தை உலுக்கிய புகைப்படம்!!

1
தனது மனைவியின் இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா - இணையத்தை உலுக்கிய புகைப்படம்!!
தனது மனைவியின் இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா - இணையத்தை உலுக்கிய புகைப்படம்!!

பிரபல பாடல் ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அருண்ராஜாவின் மனைவி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது அவரது இறுதி சடங்கினை அருண்ராஜா பிபிஇ சூட்டை அணிந்து செய்து வருகிறார். தற்போது அந்த புகைப்படம் அனைவரின் மனதையும் கலங்க வைத்து வருகிறது.

பாரதி காதலியே கண்ணம்மா, டிஎன்ஏ டெஸ்ட் எப்போமா?? பாரதி கண்ணம்மாவை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

அருண்ராஜா:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியராக திகழ்பவர் தான் அருண்ராஜா காமராஜ். இவரது காதல் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிந்துஜா உயிரிழந்துள்ளார். அவருக்கு வெறும் 38 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி திரை உலகத்தையே உலுக்கியது.சிந்துஜாவின் நெருக்கமானவர்கள் அவரது மரணத்தை தற்போது வரை நம்ப முடியவில்லை என்று வருந்துகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது மனைவியின் இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா - இணையத்தை உலுக்கிய புகைப்படம்!!
இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் சிந்துஜாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் மற்றும் எம்.எல்.ஏ வான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் வந்தனர். இந்நிலையில் சிந்துஜாவின் உடலை கண்ணம்மாபேட்டையில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.இந்நிலையில் சிந்துஜாவின் இறுதி சடங்கிற்காக அவரது கணவர் அருண்ராஜா பிபிஇ சூட்டில் வந்து இறங்கினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வடிய வைத்து வருகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here