Friday, May 14, 2021

அச்சு அசலாக வனிதாவை உரித்து வைத்திருக்கும் அருண் விஜய் மகள் – ஷாக்கான ரசிகர்கள்!!

Must Read

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அருண் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் மகள் வனிதாவை போலவே இருப்பதை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர்.

அருண் விஜய்

தமிழில் 1995 இல் எடுக்கப்பட்ட முறைமாமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். தொடர்ந்து தனது நடிப்பு திறனால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அவர் நடித்த ‘கங்கா கௌரி’ திரைப்படம் மக்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. ஆனால் அவருக்கு அதிக பிரபலத்தை ஏற்படுத்தியது பாண்டவர் பூமி திரைப்படம் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். என்ன தான் திரையுலகில் இவர்கள் ஜொலித்தாலும் வீட்டில் 1000 பிரச்சனைகளை கடந்து தான் வந்துள்ளனர். வனிதா, விஜய் குமார் இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அருண் விஜய் விஜயகுமாரின் முதல் தாரத்தின் மகன் ஆவார். வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வனிதாவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் குடும்பத்தை விட்டே பிரிந்து உள்ளார் வனிதா. அருண் விஜய் பிறந்த நாளுக்கு தொடர்ந்து தனது வாழ்த்துக்களை வனிதா வருடா வருடம் சொல்லிக்கொண்டு தான் உள்ளார். ஆனால் அருண் விஜய் சைடில் இருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸும் இதுவரையில் வரவில்லை.

கடந்த வருடம் கூட வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துக்கொண்டு பல சர்ச்சையில் சிக்கினார். இதனால் குடும்பம் மொத்தமும் வனிதாவுக்கு எதிராகவே இருந்தது. இந்நிலையில் வனிதா தற்போது தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மூத்த மகள் வனிதாவை அப்படியே உரித்து வைத்துள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா வைரஸ் ஓர் உயிரினம், அது வாழ்வதற்கு அதற்கு உரிமை உண்டு – முன்னாள் முதலமைச்சர் கருத்தினால் பரபரப்பு!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை இரண்டாம் அலை என்று தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -