அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – தமிழக அரசு செப்.30 க்குள் பதிலளிக்க உத்தரவு!!

0
Tamilnadu Government
Tamilnadu Government

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

அரியர் தேர்வுகள் ரத்து:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இறுதிப்பருவ தேர்வுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டு உள்ளன. பல்வேறு கல்லூரிகள் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மாணவர்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரியர் மாணவர்கள் பட்டதாரிகள் ஆகும் கனவில் மிதந்தனர். இந்நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார், பாலகுருசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தான் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

110 கோடி ரூபாய் வரை கிசான் திட்டத்தில் முறைகேடு – 80 பேர் பணிநீக்கம்!!

இந்நிலையில் அரியர் தேர்வுகள் ரத்து குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ, தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை பொறுத்தே அரசாணை வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here