இசைப்புயலின் 55வது பிறந்தநாள் – இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

0

தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என இதுவரை 145 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த இசைப்புயலின் பிறந்த நாள் இன்று. இதனால் பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரகுமான்:

ஏ.ஆர். ரகுமான் இசை என்றாலே மனத்திற்கு ஒரு நிம்மதியான உணர்வை தரும். ரோஜா திரைப்படத்தில் ஆரம்பித்த தனது இசை வேட்டையை தற்போது வரை வேகம் குறையாது புது புது கற்பனைகளுடன் புத்துணர்ச்சியான பாடல்களை கொடுத்த வண்ணமே உள்ளார். முதன் முதலில் ஏ.ஆர். ரகுமானின் இசை வேகத்தை பார்த்து மணிரத்னம் தான் இவரை அடுத்ததடுத்து படங்களில் இசையமைக்க தூண்டினார்.

தற்போது பல பட குழுவினர்களும் ஏ.ஆர். ரகுமான் தனது படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். இவருக்கு இன்று 55 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 55வயதில் கூட அவ்வளவு நுணுக்கமாக இசையை மக்களுக்கு பரிசாக வழங்கி கொண்டு வருகிறார். ரசிகர்கள் இவரின் பிறந்த நாளை ட்விட்டரில் #HappyBirthdayARRahman, #IsaiPuyal என்ற ஹாஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here