அக்னி வீர் ராணுவ ஆள் சேர்ப்பு முறையில் திடீர் மாற்றம்., புதிய நெறிமுறைகளை வெளியிட்டு அதிகாரி பேட்டி!!

0
அக்னி வீர் ராணுவ ஆள் சேர்ப்பு முறையில் திடீர் மாற்றம்., புதிய நெறிமுறைகளை வெளியிட்டு அதிகாரி பேட்டி!!
அக்னி வீர் ராணுவ ஆள் சேர்ப்பு முறையில் திடீர் மாற்றம்., புதிய நெறிமுறைகளை வெளியிட்டு அதிகாரி பேட்டி!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ராணுவ முகாம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அக்னிவீர் திட்டம்:

இந்தியாவில் முப்படைகளின் ஒன்றான ராணுவப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது அக்னிவீர் திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணிபுரிய முடியும். மேலும் இந்த முகாமில் பங்கு பெறுபவர்களுக்கு உடல் தகுதி, மருத்துவ சோதனை, எழுத்துத் தேர்வு எனும் முறையில் தேர்வுகள் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் தற்போது இதில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு, உடல் தகுதி, மருத்துவ சோதனை என்ற வரிசை முறையில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமே வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த அக்னி வீர் திட்டத்தின் கீழ் 16 தென் தமிழக மாவட்டங்களில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ரேஷன் கடை நேர்முகத் தேர்வின் ரிசல்ட் எப்போ? 3 மாதமாகியும் இறுதிப்பட்டியல் வெளியாகாத சோகம்!!

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://joinindianarmy.nic.in/ என்ற ராணுவத்தின் வலைத்தளத்தில் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் தீபக் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here