ஆக்ஷன் கிங் அர்ஜுன் குடும்பத்தில் நடக்கவுள்ள விஷேஷம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

0
ஆக்ஷன் கிங் அர்ஜுன் குடும்பத்தில் நடக்கவுள்ள விஷேஷம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

கன்னட நடிகரும் மற்றும் அர்ஜுன் சகோதரியின் மகனாக இருப்பவர் த்ருவா. அவர் குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் சேர இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் த்ருவா:

கன்னட திரைப்பட வட்டாரங்களில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முதலாக இருப்பவர் நடிகர் த்ருவா. மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னாள் நடிகராக இருந்து தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சகோதரியின் மகன் ஆவார். இதனை தொடர்ந்து ப்ரேரனா சங்கர் என்பவரை பல வருடங்கள் காதலித்து, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் த்ருவா சார்ஜா ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, நடிகர் த்ருவா சார்ஜா காதலித்து திருமணம் செய்துகொண்ட ப்ரேரனா சங்கர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த மாதமே குட்டி குழந்தை தங்கள் இல்லத்திற்கு வர இருப்பதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் த்ருவா சார்ஜாவுடைய அண்ணன் சிரஞ்சீவி மனைவி கர்ப்பமாக இருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் அண்ணனின் குழந்தைக்கு இவர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளித் தொட்டில் வாங்கிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பதிவிற்கு சிரஞ்சீவி மனைவி மேக்னா ராஜ் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhruva Sarja (@dhruva_sarjaa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here