எக்ஸ்ட்ரா காசு கேட்ட டாஸ்மாக் விற்பனையாளர்.., வாக்குவாதத்தில் ஈடுபட்ட மது பிரியர்.., வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!!

0
எக்ஸ்ட்ரா காசு கேட்ட டாஸ்மாக் விற்பனையாளர்.., வாக்குவாதத்தில் ஈடுபட்ட மது பிரியர்.., வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மது பாட்டில்களின் விலை ஏற்றம் அமலுக்கு வந்தது. இந்த  விலை ஏற்றத்தால் மது பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களின் விலை ஏற்றத்தால் கடை உரிமையாளருக்கும், மது பிரியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது குவாட்டர் பாட்டில்களின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்துள்ளார். இதனால் அந்த டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் மது பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் எல்லா இடங்களிலும் இப்படித்தான் மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் புகார் அளித்து கொள்ளுங்கள் என திமிராக பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here