பிரான்ஸ் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய நபர் பெற்ற அங்கீகாரம் – முக்கிய பதவி வழங்கி கெளரவம்!!

0

நமது இந்தியாவை சார்ந்த வழக்கறிஞர் தேஜஸ் சௌகான் பாரிஸில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியருக்கு பதவி:

கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைபலம், அரசியல் ஆகிய அனைத்திலும்  வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்ஸ் விளங்கி வருகிறது.  இத்தகைய பெருமை கொண்ட பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நமது இந்தியாவை சேர்ந்த நபர் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.


அதாவது, நமது நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் தேஜஸ் சௌகான் அங்குள்ள பாரிஸ் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின்  தெற்காசிய பிராந்திய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியர் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது மிகவும் பெருமை வாய்ந்த செயலாக பார்க்கப்படுகிறது.


இது மட்டுமல்லாமல், இவ்வமைப்பில் பதவி பெற்றுள்ள தேஜஸ் சௌகான் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  இத்தகு சிறப்பு கொண்ட அவையில் இந்தியர் ஒருவர் புதிய இயக்குனராக பொறுப்பேற்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here