அதென்ன கருப்பா இருந்தாலும் அழகா இருக்கேனு சொல்றீங்க, கருப்பு என்ன குறையா?? வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா!!

0

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நிஷா தனது நிறத்தை பற்றி கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா

தனது பேச்சாற்றலால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இறுதி சுற்று வரை சென்றவர் நிஷா. அதன் பிறகு நிறுத்தாமல் பல மேடை பேச்சுகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை எங்கெல்லாம் வெளிப்படுத்த முடியுமோ, அதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

aranthangi nisha

அதற்கான பலனையும் அவர் அனுபவிக்க தான் செய்தார். அதாவது பலரின் மனதில் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றே சொல்லலாம். அர்ச்சனாவால் அவர் பெயரும் சேர்ந்து தான் கெட்டு போனது.

தனது நிறத்தை பற்றி பலரும் கேவலமாக பேசியதாகவும், தன் கணவர் தான் முன்வந்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லி இருந்தார். அப்படி இருக்க தற்போது கருப்பு நிறத்தை கிண்டல் செய்பவர்களுக்கு உரைக்கும் வகையில் ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here