ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் – குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!

0
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளரான, ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தியுள்ளார்.

 பிரம்மாண்ட விழா :

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். அவரது மகள் கதீஜாவுக்கும், சேக் முகமது என்ற சவுண்ட் இன்ஜினியருக்கும் கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரகுமான் பிரமாண்டமாக நடத்தினார்.

இந்த நிகழ்வில், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மருமகள் கிருத்திகா, மகன் உதயநிதி ஆகியோருடன் நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், பிரபல இயக்குனர் மணிரத்னம் அவரது மனைவி சுகாசினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here