சத்தமே இல்லாமல் மகளின் திருமணத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான் – மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!!

0
சத்தமே இல்லாமல் மகளின் திருமணத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான் - மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!!

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது மகள் கதீஜாவின் திருமணத்தை, நேற்று எளிமையாக நடத்தி முடித்துள்ளார். இதுகுறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வைரல் புகைப்படம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவர் தற்போது பொன்னியின் செல்வன், அயலான், கோப்ரா, இரவினில் நிழல் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவர் தனது மூத்த மகள் கதீஜாவுக்கு, விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்தார். இதுபோக தன்னிடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றிய ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை, தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று, இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் ரஹ்மான் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் கலந்து கொண்டுள்ளனர். மணமக்களுடன் ஏ ஆர் ரகுமான் நடித்த குடும்ப புகைப்படம், சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், மணமக்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here