
மதுரை மாவட்டத்தின் மாபெரும் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று திருக்கல்யாணம் முடிந்த நிலையில் இன்று தேரோட்ட திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த திருவிழாவின் முக்கிய பங்காக இருந்து வரும் நாள் என்றால் அது அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் தான். வருகிற மே 5ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடக்க இருக்கிறது. அந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த சமயத்தை பயன்படுத்தி சில போதை ஆசாமிகள் பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!
எனவே இது போன்ற தவறான செயல்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அழகர் ஆற்றில் இறங்கும் 4.05.2023 அன்று மதுரையில் அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை மற்றும் மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் மதுபானக்கடைகள் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.